- ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
- Think before you spend your resources.
- ஆழம் பார்க்காமல் காலை விடாதே
- Look before you leap.
- ஆழாக்கு அரிசி, மூழாக்குப் பானை, முதலியார் வருகிற வீறாப்பப் பாரும்
- Half an ounce of rice, a quarter ounce pot. But look at the false pride of the mudhaliyar.
- ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது
- You can't teach an old dog new tricks.
- அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
- Face is the index of the mind.
- அரை கொத்தரிசி அன்ன தானம் . விடிய விடிய மேல தாளம் .
- Half a pot of rice is given as charity. But the announcing drumming is done all night.
- ஆடத் தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம்
- A bad workman blames his tools.
- அடி மேல் அடி வைத்தால் அம்மி்யும் நகரும்
- Try and try till you succeed.
- அறுக்க மாட்டாதான் கையில் 58 அரிவாளாம்
- The man is more important than the tools.
- ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கவில்லை
- You waited this much, wait just a bit more.
- ஆறெல்லாம் பாலாய்ப் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்
- What one learns is limited by ones capacity to take in (understand).
- சிறு நுணலும் தன் வாயால் கெடும்
- Know when to keep quiet.
- எறும்பு ஊரக் கல்லும் தேயும்
- Persistence never fails
- ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது
- Bookish knowledge is no match for real experience.
- இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் (திருக்குறள்)
- If others harm you, do good unto them, so that they are shamed into realizing their mistakes.
- இழவுக்கு வந்தவள் தாலியருப்பாளா?
- The problems of a person cannot be shifted to others.
- குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு
- A drunkard's words are gone by the next dawn.
- காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
- Even a crow thinks its child is golden.
- கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது
- Don't measure the worth of a person by their size/shape
- காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
- Make hay while the sun shines.
- கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு (ஔவையார்)
- What is learnt is a handful of sand, while what is unknown is the size of the world.
- கட்டிக்கொடுத்த சாப்பாடும் சொல்லிக்கொடுத்த வார்த்தையும் பல நாள் தாங்காது
- Self-reliance lasts longer than depending on others.
- கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை
- You can't drink thick porridge if you want to keep your mustache clean.
- குப்புர விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை.
- Saving face after an insult.
- கான மயிலாட கண்டிருந்த வான்கோழித் தானும் அதுவாகப் பாவித்துத் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடுமாம்
- A turkey, seeing a peacock, imagined itself as one and started dancing opening its horrible feathers (literal)
- One should know one's position and not try to copy others blindly.
- மயிரைக் கட்டி மலையை இழு. வந்தால் மலை போனால் மயிர்.
- There is no harm in trying, especially if it is a low-hanging fruit.
- மாமி்யார் உடைத்தால் மண் குடம். மருமகள் உடைத்தால் பொன் குடம்
- If the mother-in-law breaks it, it is a mud pot. If the daughter-in-law breaks it, it is a golden pot.
- முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்
- Fight fire with fire; Diamond cuts Diamond.
- மூர்த்தி சின்னதானாலும் கீர்த்தி பெரியது
- The idol may be small, its fame is big.
- மி்ன்னுவதெல்லாம் பொன்னல்ல
- All that glitters is not gold.
- மலையைக் கெல்லி எலியைப் பிடித்தானாம்
- (He) wastes a lot of effort to do simple jobs
- முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
- There is no downward journey for those who keep trying.
- நிறை குடம் நீர் தளும்பாது. குரை குடம் கூத்தாடும்
- Fully filled pot (a knowlegeable person) is silent. Empty vessels (idiots) make the most noise.
- நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்
- Only when in the sun do you miss the shade.
- நாய் விற்ற காசு குரைக்காது
- All money looks the same (no matter what was sold) (also known as the Money-launderer's Manifesto)
- நாய் வாலை நிமிர்த்த முடியாது
- It is difficult to change one's nature (similar to 'a leopard can't change its spots').
- நாய் வேடம் போட்டால் குரைத்துத்தான் ஆகவேண்டும்
- If you take on a role, be prepared to do whatever the role demands (think before you decide).
நொண்டி குதிரைக்கு சருக்குனது சாக்காம்.
- For a lame horse, slippery is an excuse
- A person not willing to do work will complain about anything.
- பாம்பின் கால் பாம்பறியும்
- The persons involved in similar activities know each other better than others do.
- புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
- A person never loses his nature no matter how hard-pressed.
- பொறுத்தார் பூமி் ஆள்வார்
- The patient will rule the world.
பெற்ற பிள்ளை இல்லாட்டியும் வச்ச பிள்ளை தண்ணி ஊற்றும்.
- Even if your children are not helping you, the coconut that you planted will take care of your old age.
- புடிச்சாலும் புளியம் கொம்பா புடிச்சிட்டார்
- He has taken a strong position (in the activity he is engaged in).
- பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்
- Beware of those that get a commission from both parties.
- சாதி இரண்டொழிய வேறில்லை, இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்.
- There are only two types of people in this world: those that share, and those that don't.
- சுண்டைக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம்
- A quarter for the berry, three quarters for the delivery (literal)
- தனி மரம் தோப்பு ஆகாது
- Unity is strength.
- தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம், அது பனிக்கட்டி ஆகும் வரை பொருத்தால்.
- Even water can be held in a sieve, if you wait till it turns to ice.
- தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு (திருக்குறள்)
- The wounds of fire would vanish with time but the wounds caused by words never (
- தீதும் நன்றும் பிறர் தர வாரா
- Good or bad, it doesn't come from others. You are responsible for what you get/face.
ஊரு மெச்சும், உள்வீடு பட்டினி
- Fame does not automatically fetch one money.
- வெறும் கை என்பது மூடத்தனம் உன் விரல்கள் பத்தும் மூலதனம்
- Your effort is what all you have got.
- வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தைப் பண்ணிப்பார்.
- If you think daily life is painful, try building a home or organizing a wedding. These activities involve bringing a lot of people together and can never be done in a day, and hence expose a person to the complexities of project and people management.
- விதியை மதியால் வெல்லலாம்
- Don't assume that fate is final. With intelligence, even fate can be changed.
வெக்கங்கெட்ட பயல் விருந்துக்குப் போனானாம், கூட ஒரு சொக்கன் குத்தவைக்கப் போனானாம்.
- Never be in the company of bad person.
வெட்டரிவாளுக்கு விரையலா காய்ச்சலா.
- A family-less person will not have to face troubles.
- விளக்கமாற்றுக்குப் பட்டுக்குஞ்சலம்
- An unfitting ornament or an attempt to show something lowly as commendable by superficial decoration.
- வித்தரக்கள்ளி(?) விறகு ஒடிக்கப் போனாளாம், கத்தாழை முள்ளு கொத்தோடு குத்தித்தாம்.
- A person who is not interested in work will blame the nature of work.
- யானைக்கும் அடி சறுக்கும்
- Even the mighty slip at times.